நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். பாலா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூர்யா ஜோதிகா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தை தொடர்ந்து மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ள இப்படத்தில் இயக்குனர் அமீர், ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வெற்றி இயக்குனரான வெற்றிமாறன் படத்தில் சூர்யா முதல் முறை நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் சம்மந்தமான அப்டேட் அவ்வப்போது வெளிவருகிறது. சில நாட்களுக்கு முன்னர் ஏறுதழுவுதல் சம்மந்தமான வீடியோ ஒன்று வெளியானது. இதில் நடிகர் சூர்யா மாட்டோடு பயிற்சி எடுப்பது போல இருந்தது. மேலும் மாடுபிடி வீரர்களிடம் பயிற்சி எடுப்பது போல இருந்தது. அந்த விடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
மேலும் நாட்டின் 68வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் 5 விருதுகளை வென்றது. சிறந்த நடிகராக சூர்யா பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் உடன் விருதை பகிர்ந்து கொண்டார். சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளிக்கு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் பிரபல இயக்குனரான பாரூக் கபீருடன் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது சம்மந்தமான பேச்சுவார்த்தை நடைப் பெற்று கொண்டிருக்கிறது. ‘வணங்கான்’, ‘வாடிவாசல்’ ஆகிய படங்கள் நடித்து முடித்த பின் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
