நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2 படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கி வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, நடிகை ராதிகா, ரவி மரியான் ஆகியோர் நடித்து வருகின்றனர். பிரம்மாண்டமாக தயாரித்து உருவாகும் இப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. பாகுபலி மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

மேலும் வைகைப்புயல் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் ரசிகர்களுக்கு இடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சந்திரமுகி படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படமும் வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு அறிவித்து உள்ளது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் இதனை அதிகாரபூர்வமாக தெரிவித்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து நடிகை ராதிகா சரத் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை பகிர்ந்து உள்ளார். அதில் அவரும் ராகவா லாரன்ஸும் வடிவேலை கன்னத்தில் கிள்ளுவது போல் உள்ளது. உடனே வடிவேல் நகைச்சுவையாக புஹா என்று கத்துகிறார். 5 விநாடிகள் மட்டுமே உள்ள இந்த வடிவேலுவின் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் தலைவன் பாக் டு ஃபார்ம் என்று விடியோவை பகிர்ந்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ👇