நீ தான் ஏன் தங்கச்சி, நாம ரெண்டு பேரும் ஒன்னு!❤️- வடிவேலுவின் நெகிழ்ச்சி சம்பவம்!

வடிவேலுவை பிடிக்காத மனிதர்களே இல்லை என கூறலாம். சிறியவர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் என அனைத்து ரசிகர்களும் தன வசம் வைத்திருப்பவர் நகைச்சுவை நடிகர் ‘வைகைப்புயல்’ வடிவேலு. தொடர்ந்து பல ஆண்டுகள் நடிக்காமல் அவர் இருந்தாலும் அவர் ரெபெரென்ஸ் இல்லாத டெம்ப்ளட் மற்றும் மீம்ஸ் இல்லை என கூறலாம். மீம்ஸ் உலகத்தின் கடவுள் என கூறப்படும் வடிவேலு தற்போது சந்திரமுகி-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.

raghava-lawrence-vadivelu
Raghava Lawrence – Vadivelu

மைசூரில் முதல்கட்ட படபிடடிப்பு முடிவடைந்த நிலையில் காரில் வீட்டிற்கு செல்லும் வழியில் ஈரோடு மாவட்டம் வழியே சென்று உள்ளார். ஈரோடு மாவட்டத்தில் சத்யமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வடிவேலு சாமி தரிசனம் பெற சென்று உள்ளார். பிறகு சாமி தரிசனம் செய்த வடிவேலு கோவிலை விட்டு கிளம்பி உள்ளார். அவரது வருகையை அறிந்த பக்தர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். பிறகு ஒருவருக்கொருவர் வடிவேலுடன் போட்டோ எடுத்து கொண்டனர்.

vadivelu
Vadivelu at temple

பிறகு கோவிலில் தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒரு பெண்ணை அழைத்து உள்ளார் வடிவேலு. அந்த பெண் வடிவேலை பார்த்ததும் காலில் விழுந்து ஆசி பெற்று உள்ளார். உடனே வடிவேலு அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். பிறகு அந்த பெண்ணிடம் “நீதான் ஏன் தங்கச்சி. நாம ரெண்டு பெரும் ஒன்னு, நீயும் நானும் ஒரே மண்ணு” என கூறியுள்ளார்.

vadivelu

தூய்மை பணி செய்து கொண்டு இருக்கும் பெண்ணிடம் இவ்வாறு அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் வடிவேலு சிறந்த மனிதர் என இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை “என்ன மனுஷன்” என பகிர்ந்து வருகின்றனர்.

Twitter Video Embed Code Credits : Polimer News

Spread the Info

Leave a Comment