தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களிள் முக்கியம் ஆனவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். இருவருக்குமே கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்களது ஒரு சாதாரண புகைப்படம் மற்றும் வீடியோ வந்தாலே சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும். அப்படி இருக்கும் போது படம் என்றால் சொல்லவா வேணும். விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியானாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

அதே சமயம் சமூக வலைத்தளங்களில் அதிக சண்டை மற்றும் மோதல்களும் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக இருவர்களின் படங்கள் வெளியானால் ரசிகர்கள் ஒருவரையொருவர் மீம்ஸ்களில் சீண்டி கொண்டுதான் இருக்கிறார்கள். தனி தனியாக படங்கள் வெளியானாலே ஏகப்பட்ட மோதல்கள் உருவாகும். இந்நிலையில் ஒரே நாளிள் படங்கள் வெளியானால் எப்படி இருக்கும்?.

நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். வம்சி இயக்கி வரும் இப்படத்திற்கு ‘தமன்’ முதல் முறையாக இசையமைக்கிறார். இப்படமானது அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல நடிகர் அஜித்குமார் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். மேலும் வலிமை படத்தை இயக்கிய போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்கிறது. இப்படமானது இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் முடியாத நிலையில் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு உள்ளதால் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இதற்கும் முன்னர் விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் படம் 2014 ஆம் ஆண்டு ஒரே நாளில் வெளியானது.