விஜய் ஆண்டனி தற்போது நடித்து கொண்டு இருக்கும் ‘கொலை’ படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி, ரித்திகா சிங்க், ராதிகா சரத் குமார், ஜான் விஜய் மட்டும் பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர். பாலாஜி குமார் இயக்கியுள்ள இப்படத்தை லோட்டஸ் பிக்சர்ஸ் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் இணைந்து தயாரித்து உள்ளது.

‘சுக்ரன்’ படத்தின் மூலம் முதல் முதலாக விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதற்கு பிறகு ‘நான் அவன் இல்லை” , “வேட்டைக்காரன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ மற்றும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு அங்கத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார்.

பிறகு 2012ஆம் ஆண்டு ‘நான்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ‘சலீம்’ மற்றும் ‘பிச்சைக்காரன்’ திரைப்படங்களும் வெற்றி பெற்றது. அதற்கு பிறகு வந்த படங்கள் பெருசாக கைகொடுக்கவில்லை.

தற்போது இவர் நடித்துள்ள ‘கொலை’ படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. ஹாலிவுட்டை மிஞ்சும் அளவிற்கு இப்படம் வெளி வந்துள்ளது. மாடலாக வரும் ஒரு பெண் கொலை செய்யபடுகிறர். அவர் எவ்வாறு கொலை செய்யபடுகிறார்? எப்படி கொலை செய்யப்படுகிறார்? என்பதை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்து உள்ளார்.

மேலும் இப்படத்தின் ட்ரைலர் முழுதும் இருட்டிலே எடுக்கப்பட்டு உள்ளது. டார்க் த்ரில்லர் கதையாக இருக்கும் இப்படத்தின் ட்ரைலர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்படம் விஜய் ஆண்டனி அவர்களுக்கு கம் பேக் கொடுக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.