தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியம் ஆனவர் விஜய் தேவரகொண்டா. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது லைகர் திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். பூரி ஜெகநாத் இயக்கியுள்ள இப்படத்தை தர்மா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்து உள்ளது. இப்ப்படத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்

இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்து சண்டை வீரராக வளம் வருகிறார். மேலும் பிரபல குத்து சண்டை வீரரான மைக் டைசன் இப்படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் படத்தின் ட்ரைலர் மட்டும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் இம்மாதம் 25ஆம் தேதி வெளிவர உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும், அனன்யா பாண்டேவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து வருகின்றனர். மேலும் வடநாட்டில் பிரபல படுத்துவதற்காக பல தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகின்றனர்.

தற்போது எடுக்கப்பட்ட ஒரு போட்டோஷூட்டை அவர் பகிர்ந்து உள்ளார். பஞ்சாபில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோஷூட்டை தனது பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். வயல்வெளி நடுவில் டிராக்டரில் இருப்பது போல் அந்த போட்டோஷூட் அமைந்து உள்ளது.

மேலும் விஜய் தேவரகொண்டா அவர்கள் அனன்யா பாண்டேவை கையில் தூக்கி கொண்டு இருப்பது போன்று இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.