நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து இன்று வெளியான திரைப்படம் ‘லைகர்’. புரி ஜெகநாத் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு சுனில் காஷ்யப் இசையமைத்து உள்ளார். மேலும் இப்படத்தில் பிரபல குத்து சண்டை வீரரான மைக் டைசன் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படமானது பாக்ஸிங் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் விமர்சனத்தை பாப்போம். தனது சிறு வயதில் இருந்தே பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசனை போல் ஆக வேண்டும் என கனவு காண்கிறார் விஜய் தேவரகொண்டா. அதனால் மார்ஷியல் கலைகள் அனைத்தையும் கற்று கொள்கிறார்.

பிறகு தனது குருவே எதிரியாக மாறி விடுகிறார். கதாநாயகி அனன்யா பாண்டேவை மைக் டைசன் கடத்தி விடுகிறார். அதன் பிறகு கதாநாயகியை மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

மக்களிடம் கருத்து கேட்கும் போது உப்பு சப்பு இல்லாத படத்தை இயக்குனர் எடுத்து வைத்துள்ளார். மேலும் படம் படு க்ரின்ஞ்சாக உள்ளது என மக்கள் கழுவு ஊற்றியுள்ளனர்.