தற்போது விஜய் தனது 66ஆம் படமான ‘வாரிசு’ படத்தில் பிஸியாக உள்ளார். வம்சி இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் முதல் முறையாக இசையமைக்கிறார். ரஷ்மிக்கா மந்தனா, யோகி பாபு, பிரகாஷ்ராஜ், ஷாம், சரத் குமார், பிரபு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்து உள்ளனர். கடைசியாக நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் வாரிசு படம் சினிமா ரசிகர்களுக்கு இடையே மிகுந்த எதிர்பார்ப்பை அதிகப் படுத்தி உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விஜயின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.

மொத்தமாக மூன்று புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. அனைத்து புகைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் நேற்று விஜய் சென்னை விமான நிலையத்தில் எடுத்தபுகைப்படம் மற்றும் வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதோ அந்த வைரல் புகைப்படம்👇

சென்னையில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு டிக்கெட் எடுக்க கவுண்டரில் நின்றுள்ளார். அதை அவரது ரசிகர் ஒருவர் எடுத்துள்ளார். மேலும் விஜய் ஏர்போட்டிற்கு நடந்து வருவது போல் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த போட்டோவையும், வீடியோவையும் அவரது ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு முன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வைரல் ஆனது. மாடியில் விஜய் நடந்து வருவதைப் போல் ஒரு விடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ👇