விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் இப்படத்திற்கு தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசை அமைக்கிறார். ராஷ்மிக்கா மந்தனா, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, சரத் குமார், பிரபு ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

கடைசியாக வெளியான ‘பிஸ்ட்’ திரைப்படம் எதிர் பார்த்த அளவு வெற்றி பெறாததால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

அதில் விஜய் அவர்கள் மாடியில் நடந்து வருவது போல் அந்த வீடியோவில் இருக்கும். அதே போல தற்போது ஒரு வீடியோ கசிந்து உள்ளது. மருத்துவமனையில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் பொது அவரது ரசிகர் ஒருவர் இந்த விடியோவை படம் பிடித்துள்ளார்.

அந்த வீடியோவில் நடிகர் விஜய் மருத்துவமனையியல் ஸ்டெர்சேர் தள்ளிக்கொண்டு போவது போல் உள்ளது. கூடவே நடிகர் பிரபு மருத்துவர் வேஷத்தில் இருக்கிறார். இதிலிருந்து நடிகர் பிரபு இப்படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. 17 நொடிகள் மட்டுமே வந்துள்ள இந்த விடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து தனது 67ஆம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.