விஜய் சேதுபதி தற்போது வெற்றி மாறன் இயக்கவுள்ள ‘விடுதலை’ படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதற்கு முன்னர் நெகடிவ் ரோலில் இவர் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது. அதன் பிறகு வந்த ‘மாமனிதன்’ படமும் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படமானது பல விருதுகளை குவித்து வருகிறது. ஜப்பானின் டோக்கியோவில் நடைப்பெற்ற திரைப்பட விழாவில் இப்படம் ஆசியாவில் சிறந்த திரைப்படம் என்ற விருதை பெற்றது. சில நாட்களுக்கு முன்னர் நடந்த தாகூர் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் இப்படமானது 3 விருதுகளை குவித்து இருந்தது. சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் விஜய் சேதுபதி பெற்று இருந்தார். மேலும் சிறந்த சாதனை விருது மற்றும் விமர்சகர்களுக்கான தேர்வு விருது என மூன்று விருதுகளை அள்ளிச் சென்றது.

தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருகான் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லீ இயக்குகிறார் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஷாருகானுக்கு ஜோடியா நயன்தாரா நடித்து வருகிறார். தற்போது வெளியான தகவலின் படி விஜய் சேதுபதி இப்படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் ஷாருக்காஹ்னுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விஜய் சேதுபதி முதல் முதலாக பாலிவுட்டில் நடிக்க உள்ளதால் ரசிகர்களுக்கிடையே எதிர்பார்ப்பு அதிகப்படுத்தி உள்ளது.

தற்போது ஓடிக்கொண்டிருக்கு அமீர் கானின் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தில் நாகசைதன்யாவிற்கு பதிலாக விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். அந்த படத்தில் இருந்து அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.