தமிழ் திரைத்துறையில் தனித்துவமான நடிகராக விளங்குபவர் சீயான் விக்ரம். ‘என் காதல் கண்மணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் முகம் தெரியாத நடிகரா நடித்து வந்தார். பிறகு வந்த ‘புதிய மன்னர்கள்’ திரைப்படம் ஓரளவு நல்ல பெயரை பெற்று தந்தது. அதற்கு பிறகு பாலா இயக்கிய ‘சேது’ திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு அங்கத்தை பிடித்தார் நடிகர் விக்ரம்.

அதற்கு பிறகு ‘ஜெமினி’, ‘தில்’, ‘தூள்’ போன்ற கமர்ஷியல் படங்கள் மாபெரும் வெற்றி அடைந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆனார். கமெர்ஷியல் ஒரு ராகம் என்றால் நடிப்புக்கு இனொரு ரக படங்கள் உண்டு. ‘சேது’, ‘காசி’, ‘பிதா மகன்’, ‘தெய்வ திருமகள்’, ‘அந்நியன்’, ‘ஐ’ சொல்லி கொண்டே போலாம்.

இவர் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘கோப்ரா’ என இரு படங்களை கையில் வைத்துள்ளார். திரையுலகின் ஜாம்பவான் இயக்குனர் மணிரத்னம் அவரின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம்-1 படம் செப்டம்பர்-30 அன்று உலகெங்கும் வெளியாக உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார், பிரபு, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துஉள்ளனர்.

இந்த படத்தில் விக்ரம் கரிகால சோழனாக நடிக்க உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் காரிகலனாக நடிக்கும் விக்ரம் தான் dubbing செய்த விடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதே போல் அவர் நடிக்கும் இன்னொரு திரை படமான ‘கோப்ரா’ திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாக உள்ளது.

‘டீமான்ட்டி காலனி’, ‘இமைக்க நொடிகள்’ மூலம் பிரபலமான இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த இரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேற்று நடிகர் விக்ரம் சமூக வலை தல பக்கமான ட்விட்டரில் இணைந்து உள்ளார். இது குறித்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த விடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இணைந்த சில மணி நேரங்களில் அதிகமான ஃபல்லோவெர்ஸ் வந்து உள்ளனர். இதோ அவர் பேசிய வீடியோ👇