பிரபல நடிகருக்கு பலத்த காயம்!☹️ – படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சம்பவம்!

தமிழ் திரையுலகில் ‘செல்லமே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷால். அதைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி’ , ‘திமிரு’ , ‘தாமிரபரணி’ என தொடர் வெற்றி படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆனார். அவரின் சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அவரது ஆக்ஷன் காட்சிகளை நாம் வெறுக்க முடியாது. 44வயது ஆகும் நடிகர் விஷால் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

vishal
Actor Vishal

விஷால் படப்பிடிப்பின் போது அவர் சண்டைக் காட்சியில் அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கம். அதே போல் தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளது. நடிகர் விஷால் தற்போது ‘லத்தி சார்ஜ்’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இயக்குனர் வினோத் இயக்கவுள்ள இந்த படத்தில் விஷால் போலீசாக நடித்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீடு சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஒரே மேடையில் பேசிக்கொண்டனர்.

vishal
Vishal

தற்போது அவர் நடிக்கும் படத்தின் பெயர் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலையில் படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

vishal
Laththi Vishal

வெளியான தகவலின் படி அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ‘லத்தி’ படத்தின் படப்பிடிப்பின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பிறகும் மீண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.

Spread the Info

Leave a Comment