நடிகர் விஷால் தற்போது ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஷால், ரித்து வர்மா மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்க உள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

நடிகர் விஷால் சமீபமாக நடிக்கும் படங்கள் பெரிதாக மக்களிடம் வரவேற்பு பெறுவதில்லை. கடைசியாக நடித்த படமான ‘வீரமே வாகை சூடும்’ படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. தற்போது விஷால் ‘லத்தி’ மற்றும் ‘மார்க் ஆண்டனி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் லத்தி படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.

இதில் விஷாலுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட வீடியோ வைரலானது. தற்போது ‘மார்க் ஆண்டனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இன்று விஷால் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படம் விஷால் அவர்களுக்கு கம் பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
