நடிகர் சிம்பு நடித்து திரைக்கு வெளிவர இருக்கும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் ஆகியோர் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். மேலும் இப்படத்தை ஐசரி கணேஷன் தயாரித்து உள்ளார்.

கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஏற்கனவே சிலம்பரசனை வைத்து ‘விண்ணை தண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய இரு படங்களை எடுத்துள்ளார். தற்போது இக்கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உள்ளது என்பது குறிப்படத்தக்கது. முன்பு வெளியான இந்த இரண்டு படங்களும் நல்ல வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து ‘வெந்து தணிந்தது காடு’ படமும் நல்ல வெற்றி பெரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் நடிகர் சிம்பு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

அதைத் தொடர்ந்து படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. இந்த ட்ரைலரில் எப்படி ஒருவன் அடிமட்டத்தில் இருந்து வந்து பெரிய கேங்ஸ்டர் ஆகிறான் என்பதை போல் உள்ளது. மேலும் நடிகர் சிலம்பரசன் உடம்பை குறைத்து நடித்து ஒரு புது தோற்றத்தில் நடித்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படமானது இந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.