அஜித் குமார், திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் மற்றும் பலர் நடித்து 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘என்னை அறிந்தால்’ . கெளதம் மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் அஜித் குமார் அவர்களுக்கு மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தவர் அனிகா ரவிச்சந்திரன்.

தமிழ் திரையுலகில்முதல் முறையாக இப்படத்தில் அறிமுகம் ஆனார் அனிகா. அதைத் தொடர்ந்து ‘நானும் ரௌடிதான்’, ‘மிருதன்’ ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார். ஆனால் ‘விஸ்வாசம்’ படத்தில்தான் இவர் வெளியே தெரிய ஆரம்பித்தார். பார்ப்பதற்கு குட்டி நயன்தாரவைப் போல் இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம்.

இவரது போட்டோ ஷூட் முன்னணி கதாநாயகிகளை மிஞ்சும் அளவிற்கு இருக்கும். வயதுக்கு மீறிய உடை, இந்த வயதில் இது தேவையா என ஒரு சிலர் விம்சர்சனம் செய்வதும் உண்டு.

தற்போது இவர் மலையாள படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மலையாள படத்தில் “ஓ மை டார்லிங்” என்ற படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். 17 வயதே ஆகும் இவர் முதல் முதலாக கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.