தமிழ் நடிகை மீனா 90களில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார், சத்யராஜ் என அனைவரிடமும் நடித்து மிகவும் பிரபலமானவர். ‘கண்ணழகி’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். அதற்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காததால் குடும்ப வாழ்க்கையில் பிஸியாகி விட்டார். 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பிறகு நைனிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. அமைதியாக சென்று கொண்டிருந்த இவர் வாழ்கையில் மிக பெரும் இழப்பு ஏற்பட்டது. நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட இவரது கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் ஜூன் 20ஆம் தேதி இறந்தார். மேலும் இறப்பதற்கு முன்னர் 6 மாத காலம் படுத்த படுக்கையாக இருந்தார் என கூறப்படுகிறது.

பிறகு சோகத்தில் ஆழ்ந்த இவரது குடும்பத்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் இவரது ரசிகர்கள் பலர் ஆறுதல் தெரிவித்து இருந்தனர். சில நாட்களுக்கு முன்னர் தனது சகா நடிகைகளான ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலை தளங்களில் பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் மீனா இப்பொது தான் துக்கத்தில் இருந்து மீண்டு வருகிறார் என கூறி இருந்தனர்.
இந்நிலையில் உலக உடல் உறுப்புதானம் தினமான இன்று ஒரு பதிவை போட்டுள்ளார். “உயிரைக் காப்பாற்றுவதை விட பெரிய நன்மை ஏதும் இல்லை. உறுப்பு தானம் என்பது உயிரைக் காப்பாற்றும் உன்னதமான வழியாகும். நோயுடன் போராடும் அனைவர்க்கும் இது இரண்டாவது வாய்ப்பு. உறுப்புதானம் செய்யும் ஒருவர் 8 பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். உடல் உறுப்புதானத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இன்றய தினம் எனது உடல் உறுப்புக்கள் அனைத்தையும் தானம் செய்வேன் என உறுதிமொழி எடுத்து கொண்டேன்” என இவ்வாறு அவர் பதிவில் போட்டுள்ளார்.