விக்னேஷ் சிவன் தமிழ் திரையுலகில் ‘போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு அவருக்கு பெயர் எடுத்து கொடுத்த படம் “நானும் ரௌடிதான்”. விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி நடித்த இப்படமானது மாபெரும் வெற்றி அடைந்தது. அப்படத்தில் இருந்ததே நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது.

தொடர்ந்து 6 வருடம் காதலித்த இவர்கள் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த கல்யாண நிகழ்ச்சியில் தமிழ் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், சூரியா, விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருகான், இயக்குனர் மணிரத்னம், ஏ.ஆர். ரகுமான், அனிருத் ரவிச்சந்தர் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

அதன் பிறகு தங்களது ஹனி மூனிற்கு தாய்லாந்து சென்று இருந்தனர். அங்க எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது மீண்டும் தனது சொந்த விமானத்தில் பார்சிலோனா சென்றுள்ளனர்.
நயன்தாரா தற்போது ஜவான் படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருகான் அவர்களோடு நடித்து கொண்டு இருக்கிறார். அட்லீ இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடன் பரிசேலோனாவிற்கு பறந்து இருக்கின்றனர் நயன்-விக்கி. விமானத்தில் எடுக்கப்பட்ட ரொமான்டிக் புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் “ஏலே விக்கி எங்க வயிறு எரித்துலே” என தங்களது ஆதங்கத்தை மீம்ஸ்களில் நகைச்சுவையாக ஷேர் செய்து வருகின்றனர்.