நீலாம்பரி ரிட்டன்ஸ்!😱 – ஜெயிலர் லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க உள்ளார். நெல்சன் திலிப் குமார் இயக்க உள்ள இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் 3வது முறையாக இசையமைக்க உள்ளார். இதற்கு முன்னர் அனிருத் ரவிச்சந்தர் ‘பேட்ட’ மற்றும் ‘தர்பார்’ படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் ராய், ப்ரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

jailer
Jailer Rajinikanth

மேலும் பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் தொடர்பான முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறும் என சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். மேலும் சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ரஜினிகாந்த சந்தித்து இருந்தார்.

rajinikanth
Rajinikanth

அதற்கு பிறகு செய்தியாளரை சந்தித்த ரஜிகாந்த்திடம் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என கேட்கப்பட்டது. அதற்கு இந்த மாதம் 15ஆம் தேதி இல்லை 22ஆம் தேதி தொடங்கும் என கூறினார்.இந்நிலையில் இப்படத்தின் அடுத்த தகவல் வெளி வந்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. மேலும் அவர் ரஜினிக்கு வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

padayappa
Padayappa

இதற்கு முன்னர் ரஜினிகாந்த் அவர்களும் ரம்யா கிருஷ்ணன் அவர்களும் இணைந்து நடித்த படையப்பா படத்தை யாராலும் மறக்க முடியாது. ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. அதைப்போலவே இந்த படத்திலும் வில்லியாக நடிக்க உள்ளதால் நீலாம்பரி ரிட்டன்ஸ் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

padayappa
Padayappa
Spread the Info

Leave a Comment