நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க இருக்கிறார். நெல்சன் திலிப் குமார் இயக்க உள்ள இப்படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் 3வது முறையாக இசையமைக்க உள்ளார். இதற்கு முன்னர் அனிருத் ரவிச்சந்தர் ‘பேட்ட’ மற்றும் ‘தர்பார்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பிரபல கன்னட நடிகரான சிவ ராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் தொடர்பான முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறும் என சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியான நிலையில், நடிகர் ரஜினிகாந்த் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார்.

மேலும் சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ரஜினிகாந்த சந்தித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு செய்தியாளரை சந்தித்த ரஜிகாந்த் அவர்களிடம் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என்று கேட்கப்பட்டது. அதற்கு இந்த மாதம் 15ஆம் தேதி இல்லை 22ஆம் தேதி தொடங்கும் என கூறி இருந்தார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நெகடிவ் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. தற்போது ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகை தமன்னா தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம் ஆகியோருடன் நடித்து இருக்கிறார்.

இப்போது முதல் முறையை நடிகர் ரஜினிகாந்துடன் இனைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ‘ஜெயிலர்’ படத்தின் அப்டேட் அடிக்கடி வருவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.