தமிழ் திரையுலகில் ‘ஜோடி’ திரைப்படம் அறிமுகமானவர் நடிகை திரிஷா. ஒரு சில காட்சிகளில் மட்டுமே இப்படத்தில் தோன்றி இருந்த த்ரிஷா ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இவர் நடித்த ஹார்லிக்ஸ் விளம்பரத்தை யாராலும் மறக்க முடியாது.

அதன் பிறகு ‘சாமி’ , ‘கில்லி’, ‘திருப்பாச்சி’ என வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகியாக மாறினார். அதன் பிறகு ஒரு கால கட்டத்தில் பட வாய்ப்பு குறைந்தது. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களிலேயே நடித்து வந்தார். பிறகு ’96’ படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. தற்போது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க உள்ளார். 39 வயது ஆகும் த்ரிஷாவுக்கு இன்னும் மவுசு குறையவில்லை என கூறலாம். மேலும் இவர் கல்யாணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் அரசியலில் நுழைய உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. மேலும் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. இதைக் குறித்து அவர் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை. மேலும் அவர் இதைப் பற்றி கூறினால்தான் இந்த தகவல் உணமையா? இல்லை வதந்தியா? என்று தெரிய வரும்.