மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு மீறல் ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற இப்போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசானது பொறுப்பேற்று 14 மாதங்கள் தான் ஆகியுள்ளது. ஆட்சியேற்ற நாளில் இருந்து இப்போது வரை மக்கள் ஏராளமான துன்பங்களை சந்தித்துள்ளனர். மேலும் இப்போராட்டத்தை பார்த்து முதல்வர் ஸ்டாலின் நடுங்கி உள்ளார்.

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்று பாடுபட்டவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆவார், ஆனால் கருணாநிதியால் அதை செய்ய முடியவில்லை என கூறினார். தொடந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் முன்னாள் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனத்தில் தொடர்ந்து பேசினார்.

அப்போது தன்னை மறந்து எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தில் இருந்து பாட்டு பாடினார். அப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பாடிய பாட்டு காலத்தால் அளிக்க முடியாது. மேலும் 50 வருஷம் ஆனாலும் 100 வருஷம் ஆனாலும் கேட்டுகிட்டே இருக்கலாம் என கூறி எம்.ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் இருந்து “உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்” என பாட்டு பாடினார். உடனே உடன் இருந்த பிற அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாகியதால் கூட்டமே சிரிப்பலை ஆனது. இதோ அந்த வீடியோ👇