பிரபல இயக்குனரின் மகளோடு ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்!😄 – யார் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அனுதீப் இயக்கம் இப்படத்தை தமன் இசை அமைக்கிறார். இப்படத்தில் மரியா ரியா போஷாப்கா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து ‘மாவீரன்’ படத்தில் நடிக்க உள்ளார். ‘மண்டேலா’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார். இவர் சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் நடித்து வெளி வந்த கடைசி இரன்டு படங்களான ‘டான்’ மற்றும் ‘டாக்டர்’ திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

maaveeran-sivakarthikeyan
Maaveeran First Look

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் 100 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த படத்தை தேசிய விருது வென்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்க உள்ளதால் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. இப்படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வகமாக வெளியாகி உள்ளது. அதிதி ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்து உள்ளார்.

aditi-shankar
Aditi Shankar

தற்போது கார்த்தியோடு இணைந்து நடித்த விருமன் திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் இவர் தமிழ் திரை உலகில் முதல் முறையாக அறிமுகமக உள்ளார். மேலும் இப்படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் கமிட் ஆகி உள்ளார். ‘பிரின்ஸ்’ மற்றும் ‘மாவீரன்’ படங்கள் அடுத்தடுத்து வருவதால் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Spread the Info

Leave a Comment