அதிமுகவின் இடைகாலப் பொதுச்செயலாளர் மற்றும் எதிக்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை ஒன்று வெளிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது திமுக ஆட்சியில் மக்கள் அனைவரும் மத்தளத்தைப் போன்று இரு பக்கமும் இடி வாங்கிக் கொண்டுள்ளனர். ஏற்க்கனவே வேலையின்மை, கொரோனா அதிகரிப்பு, வருமானம் குறைவு போன்ற பிரச்சனைகளைச் சந்தித்த மக்கள் மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் திராவிட மாடல் என தம்பட்டம் அடித்துக் கொண்டு மக்களை வஞ்சிக்கவே செய்கின்றனர்.

2022-2023ஆம் நிதி நிலை அறிக்கையை திமுக தாக்கல் செய்யும் போது வரியில்லா பட்ஜெட் அளித்துள்ளோம் என கூறினார்கள். ஆனால் இப்பொழுது மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு வகையில் கட்டண உயர்வு, வரி உயர்வு என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர். மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இந்த கொடூர ஆட்சியில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைப்பெறும். இந்த கண்டனம் சம்மந்தமாக அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஏற்பாடு செய்யவேண்டும். மக்களின் நலன் கருதி இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறுவதால் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். மேலும் கழக நிர்வாகிகளும், பொது மக்களும் பெருமளவில் திரண்டு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.