தமிழகம் கொலை, கொள்ளை, போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என எதிக்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் தமிழ் நாடு முழுதும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், கொலை களமாக மாறி வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர். கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்து உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் சில நாட்களுக்கு முன்னர் சட்டம் ஒழுங்கை தானே கவனிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறி இருந்தார்.
இதுதான் அவர் சட்டம் ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த படுகொலைகளுக்கு ஸ்டாலின் அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களை பாதுகாக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.