ஜெயலலிதா அவர்களுக்கு கொடுத்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை! – எய்ம்ஸ் மருத்துவமனை!

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அப்பலோ மருத்துவமைக்கு அழைத்து சென்றனர். 75 நாட்கள் வரை தொடர்நது சிகிச்சை அளிக்கப்பட்டது, மேலும் யாருக்கும் பார்ப்பதற்கு அனுமதி தரவில்லை. ஜெயலலிதா அவர்கள் நலமோடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் 2016அம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த நிகழ்வால் அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் சோகமாயினர்.

jayalalithaa
Tamil Nadu Former Chief Minister J.Jayalalithaa

இந்நிலையில் தமிழத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக அப்பலோ மருத்துவமனையின் மருத்துவர்கள், சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தபட்டது, ஆனால் விசாரணை முடிந்த பாடில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவ குழுவை விசாரணை நடத்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

jayalalithaa
J.Jayalalithaa

மேலும் இந்தக்குழுவானது அனைவரிடமும் விசாரணை நடத்தி இந்த மாதம் இறுதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்வதாக கூறி இருந்தது. இந்நிலையில் ஜெயலலிதா அவர்களுக்கு சிகிச்சை அளித்ததில் எந்த தவறும் நடக்கவில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா அவர்கள் தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நோய்களுக்கே சிகிச்சை அளிக்கப்பட்டது, அதில் தவறு எதும் இல்லை என மருத்துவ அறிக்கை கூறியுள்ளது.

Spread the Info

Leave a Comment