சிட்டிசன் 2.O! – அது ரீலு! இது ரியலு! – மாஸ் காட்டிய AK😎 வீடியோ!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க திருச்சிக்கு இன்று வந்தார். திரையுலகில் மாஸான நடிகராக இருந்தாலும் இவருக்கு இன்னொரு பக்கமும் உண்டு. திரைப்படங்களில் ஒரு பக்கம் நடித்தாலும் பைக்கிங், குக்கிங் மற்றும் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் உடையவர் நடிகர் அஜித் குமார். அவரின் ஒரு புகைப்படம் வெளியானலே சமூக வலைத்தளங்களில் வெளியாகி அவரது ரசிகர்கள் பலரால் கொண்டாடப்படுவது வழக்கம். சிறிது நாட்களுக்கு முன்னர் பைக்கில் எடுத்த புகைப்படம் வைரல் ஆனது.

ajith-kumar
Ajith Kumar

மேலும் ஐரோப்பாவிற்கு சென்று இருந்த அஜித் குமார் ஒரு ஷாப்பிங் மாலில் எடுக்கப்பட்ட புகைப்படமும் வைரல் ஆனது. பொது மேடை நிகழ்ச்சிகளில் பெரிதும் ஈடுபடாதவர் நடிகர் அஜித்குமார் மற்ற விஷயங்களில் ஆர்வம் உடையவர். அந்த வகையில் தற்போது திருச்சியில் நடந்து வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் குமார் கலந்து கொண்டுள்ளார். மொத்தமாக மூன்று பிரிவுகளில் நடைபெறுகின்ற இப்போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் அஜித் குமார் இன்று காலையில் விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரின் வருகையை அறிந்த அவரது ரசிகர்கள் விமான நிலையத்தில் சூழ்ந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ajith-kumar-trichy
Ajith Kumar Trichy

உடனே தன் ரசிகர்களை கண்ட அவர் கையசைத்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்தில் துள்ளி குதித்தனர். பின்பு போட்டியில் பங்கேற்ற அவர் போட்டி முடிந்ததும் கிளப்பில் உள்ள மொட்டை மாடியில் நின்று ரசிகர்களிடம் கையசைத்தார். உடனே ரசிகர்கள் மகிழ்ச்சியில் கத்தி ஆரவாரம் செய்தனர். இக்காட்சியானது அவர் நடித்த சிட்டிசன் படத்தின் கிளைமாக்ஸ் போல இருந்தது. மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இதை சிட்டிசன்-2.O என்று அவரது ரசிகர்கள் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த வீடியோ👇

YouTube Video Embed Credits: Thanthi Tv
Spread the Info

Leave a Comment