தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ளார். திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தாலும் இவருக்கு இன்னொரு பக்கமும் உண்டு. திரைப்படங்களில் ஒரு பக்கம் நடித்தாலும் பைக்கிங், குக்கிங் மற்றும் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் உடையவர் நடிகர் அஜித் குமார். அவ்வப்போது அவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அவரது ரசிகர்கள் பலரால் கொண்டாடப்படுவது வழக்கம்.

சிறிது நாட்களுக்கு முன் பைக்கில் எடுத்த புகைப்படம் வைரல் ஆனது. மேலும் ஐரோப்பாவிற்கு சென்ற அஜித் குமார் ஒரு ஷாப்பிங் மாலில் எடுக்கப்பட்ட புகைப்படமும் வைரல் ஆனது. பொது மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நடிகர் அஜித்குமார் மற்ற விஷயங்களில் ஆர்வம் உடையவர். அந்த வகையில் தற்போது திருச்சியில் நடந்து வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. அதில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டுள்ளார். மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சியில் உள்ள கே.கே.நகரில் நடைப்பெற்று வருகிறது.

மொத்தமாக மூன்று பிரிவுகளில் அதாவது 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் பிரிவுகளில் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள இருக்கும் அஜித் குமார் இன்று காலையில் விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரின் வருகையை அறிந்த அவரது ரசிகர்கள் விமான நிலையத்தில் சூழ்ந்து கொண்டனர். உடனே அவர்களை பார்த்து கையசைத்தார் அஜித் குமார். கூட்டம் அதிகமாக சூழ்ந்து கொண்டதால் போலீசார் விரட்டி அடித்தனர்.
