ஊ சொல்றியா மாமா! குத்தாட்டம் போட்ட அக்‌ஷய் -சமந்தா எடிஷன்!

புஷ்பா படத்தில் உள்ள ஊ சொல்றியா மாமா பாட்டு தெரியாதவர்கள் இல்லை எனக் கூறலாம். பட்டித்தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய இந்த பாடல் பெரியவர், சிறியவர் என அனைவரும் ரசித்து பார்த்தனர். அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிக்கா நடித்த இப்படமானது இந்தியா முழுதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாடல், ஆக்க்ஷன் என அனைத்தும் வைரலாகி செலிப்ரட்டிகள் பலர் கொண்டாடி ரீல்ஸ் செய்து வந்தனர். அதில் முக்கியமான ஒரு பாடல் “ஊ! சொல்றியா மாமா ஊ! ஊ! சொல்றியா மாமா”. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படத்தில் ஆண்ட்ரியா ஹஸ்க்கி குரலில் இப்பாடலைப் பாடி இருந்தார் மற்றும் சமந்தா இந்த பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.

samantha-akshay

ஒரு பாட்டில் ஆடி ஒட்டுமொத்த பாராட்டையும் தட்டி சென்று விட்டார். மேலும் இப்பாட்டானது அதன் ஒரிஜினல் வெர்ஷன் தெலுங்கை விட தமிழில் தான் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதை தெலுங்கு ரசிகர்கள் பலரும் ஒப்புக் கொண்டனர். இந்நிலையில் நேற்று சமந்தா பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது. பாலிவுட்டின் பிரபல ஷோ ஒன்றில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் அக்ஷய் குமார் இந்த பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

samantha-akshay

நெட்டிசன்கள் அனைவரும் இவ்வீடியோவை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த பாடலை சமந்தா மற்றும் அக்‌ஷய் குமார் ரிகிரியேசன் செய்துள்ளனர் என நெட்டிசன்கள் fun செய்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ👇

Youtube Video Code Embed Credits: Bollywood Now

Spread the Info

Leave a Comment