மீண்டும் அமலாபால் – ‘காடவர்’ ட்ரைலர் வைரல்!😉

இயக்குனர் அனூப் பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்து வெளியாக இருக்கும் படம் ‘கடாவர்’ . அமலாபால் மற்றும் தனஸிர் சலாம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், அதுல்யா ரவி, முனீஷ் காந்த், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்து உள்ளனர். கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தில் அமலாபால் பத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை அமலாபால்.

amala-paul
Amala Paul

மைனா படத்தில்தான் இவர் யாரென்று அனைவர்க்கும் தெரிய வந்தது. குடும்ப பாங்காக நடித்திருந்த அப்படமானது பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு வேட்டை, தலைவா, வேலையிலா பட்டதாரி போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது. பிறகு இயக்குனர் விஜயை 2014ஆம் திருமணம் செய்தார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வந்த அமலா பால் ‘dusky queen’ என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். பிறகு கிளமரில் இறங்கினர்.

amala-paul
Amala Paul

இன்ஸ்டாகிராமில் இவர் போட்டு வரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவியும். 2019ஆம் இவர் நடித்து வெளியான ‘ஆடை’ திரைப்படம் இவரது நடிப்பை பற்றி பேசப்பட்டது. அதற்கும் பிறகு படங்கள் எடுபடாததால் போட்டோ ஷூட்டில் ஈடுபட்டு வந்தார். தற்போது ‘கடாவர்’ படத்தில் மீண்டும் வித்யாசமாக நடித்து உள்ளார். இந்த படமானது இவருக்கு கம் பேக் கொடுக்கும் என பார்க்கப்படுகிறது. இந்த படமானது ஆகஸ்ட் 12ஆம் தேதி ஓ.டி.டியில் வெளியாக உள்ளது.

Spread the Info

Leave a Comment