நெட்டிசன்களுக்கு தேவையான முக்கியமான விஷயம் கன்டென்ட். ஏதாவது சுவாரசியமான, சூடான, ட்ரெண்டான தகவல்களை ஒரு வாரமாவது வச்சு செய்வது அவர்களது வழக்கம். நகைச்சுவையாக, கேலியாக மீம்ஸ் மற்றும் ட்ரோல் செய்வது அவர்களது வழக்கம். அந்த பாணியில் இந்த வாரம் சிக்கியவர் தான் பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன். நீங்கள் பயன்படுத்தி கொண்டு இருக்கும் சமூக வலைத்தளங்களில் கடந்த வாரத்தில் ஒரு முறையாவது இவரது ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ்களை பார்த்து இருப்பீர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொண்டு பொருளாதாரம் சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து பேசி பிரபலமானவர் இவர்.

கடந்த சில மாதங்களாக சேமிப்பு மற்றும் சிறு சேமிப்பை பற்றி இவர் பேசும் விடியோக்கள் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும் சேமிப்பை பற்றி இளைஞர்களிடம் இவர் பேசும் டயலாக்குகள் பேச்சு பொருளாகி வைரலாகி வருகிறது. மேலும் இளைஞர்கள் எவ்வளவு செமிகிறார்கள் எவ்வளவு சம்பாதித்தால் எவ்வளவு சேமிக்கலாம் என்று ஒரு திட்டம் போட்டு குடுத்து வருகிறார். 10 ஆயிரத்தில் இருந்து 1 லச்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரை எவ்வளவு சேமிக்கலாம் என ஏகப்பட்ட ஐடியாக்கள் இவரிடம் உள்ளது. மாதம் 25 ஆயிரம் மட்டுமே சம்பாதிக்கும் உனக்கு நெட்ஃபிலிக்ஸில் அக்கௌன்ட் எதற்கு? அதான் யூடியூப்பில் இலவசமாக பல நிகழ்ச்சிகள் வருகிறதே அதை பார்க்க வேண்டியதானே? போன்ற மாஸான கேள்விகளை கேட்டு இளைஞர்களை யோசிக்க வைத்தார்.

21 வயதிற்கு மேல் சேமிப்பை தொடங்க வேண்டும் இல்லை எனில் 30 வயதில் எப்படி எல்லாம் கஷ்டப்படுவோம் என விளக்கம் அளிப்பவர். மேலும் முறையான சேமிப்பு இல்லையெனில் கல்யாணம் செய்யாதீர்கள், வாகனம் வாங்காதீர்கள், லோன் வாங்காதீர்கள் என அனல் பறக்கும் பேசும் இவரின் பேச்சை ஒரு சிலர் சரிதான் என கூறினாலும், நெட்டிசன்கள் இவரை வச்சு செய்கின்றனர் ஏன் கூறலாம். மீம்ஸ் மட்டும் ட்ரோல்களில் இவர் கன்டென்ட் ஆகி வருகிறார். கடந்த சில சமூக வலை தளங்களில் இவரை வைத்து மீம்ஸ்களை போட்டு தள்ளி கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.