ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மூன்றாம் போட்டி இன்று நடைபெற்றது. இதில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் சாகிப் அல்ஹஸன் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் இருந்ததே ரன் எடுக்க தடுமாறியது. அதிகபட்சமாக மோசஸாடெக் ஹுசைன் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

20 ஓவர் முடிவில் 7 விக்கெட்க்ளை இழந்து 127 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பாக ராஷித் கான் மற்றும் முஜிபுர் ரகுமான் தலா 3 விக்கெட்களை எடுத்தனர். பிறகு களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி மந்தமாகவே ஆரம்பித்தது. 15 ஓவர் வரை 65 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அதற்கு பிறகு இறங்கிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேனான நஜிபுல்லா சார்தான் சிக்ஸர்களாக அடித்து பறக்க விட்டார்.
17 பந்துகளை சந்தித்த இவர் 42 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். இதில் 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கும். இறுதியாக 18.3 ஒவரில் வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான் அணி. சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்க்ளை சாய்த்த முஜிபுர் ரஹ்மான் ஆட்ட நாயகன் விருத்தைப் பெற்றார்.
