ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளது. குரூப்-எ அணியில் இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் ஹாங்காங்க் அணிகள் உள்ளன. குரூப்-பி அணியில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. இன்று நடைப்பெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கை அணியும் மோதின.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் இருந்ததே ரன் குவிக்க திணறியது. முதல் 2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை இழந்தது. அதிகபட்சமாக பானுக ராஜபக்ஷே 38 ரன்களும் கருணாரத்னே 31 ரன்களும் எடுத்தனர். 20வது ஓவரில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இலங்கை அணி.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக பாசல்ஹக் ஃபருக்கி 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பிறகு எளிய இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹசுறதுல்லாஹ் சாசாய் 37 ரன்களும் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் 41 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய பாசல்ஹக் ஃபருக்கி ஆட்ட நாயகன் விருத்தைப் பெற்றார்.
