ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் இருந்ததே ரன் எடுக்க திணறியது. கேப்டன் பாபர் ஆசாம் 10 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமாரிடம் விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டேனா இருந்தது. அதிகபட்சமாக மொஹம்மத் ரிஸ்வான் 45 ரன்கள் எடுத்தார். 20வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்து. இந்திய அணியின் சார்பாக அபாரமாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்கள் மற்றும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களைச் சாய்த்தார்.

பிறகு களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க பேட்ஸ் மேனாக காலம் இறங்கிய கே.எல்.ராகுல் முதல் பாலிலேயே அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அதன் பிறகு விராட் கோஹ்லி 35 ருண்களுக்கு வெளியேறினார். பிறகு பொறுப்புடன் ஆடிய ரவீந்திர ஜடேஜா 35 ரன்களும் ஹர்திக் பாண்டியா 33 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தனர்.

சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் 3 விக்கெட்களையும் பேட்டிங்கில் 33 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
