ஆசிய கோப்பை கிரிக்கெட் 2022 தொடரின் மூன்றாம் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்தியா அணி சிறப்பாக ஆரம்பித்தது. சிறப்பாக தொடங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 21 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

அதன் பிறகு ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோஹ்லி மெதுவாக ரன்கள் சேர்த்தனர். 39 பந்துகளை சந்தித்த கே.எல்.ராகுல் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பிறகு களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தை அதிரடியா மாற்றினார்.

26 பந்துகளை சந்தித்த அவர் 68 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்ஸ்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். இறுதியாக இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. பிறகு களம் இறங்கிய ஹாங்காங் அணியும் ஆரம்பதில் இந்தியா அணிக்கு இணையாக ஆடியது. ஆனால் குறிப்பிட்ட கட்டத்தில் ரன்கள் எடுக்க திணறியது.

இறுதியில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் ஹயாத் 41 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேந்தெடுக்கப்பட்டார்.