ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான 2வது போட்டி இன்று துபாயில் நடைப்பெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்பு களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல். ராகுல் அதிரடியாக ஆரம்பித்தனர்.

முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 54 ரன்கள் எடுத்தது. பிறகு அடுத்தடுத்து இருவரையும் தங்களது விக்கெட்களை பறி கொடுத்தனர். அதன் பிறகு களம் இறங்கிய விராட் கோஹ்லி 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் குவித்தது. பிறகு களம் இறங்கிய பாக்கிஸ்தான் அணி சற்றும் சளைக்காமல் விளையாடியது.

ஓப்பனிங் பேட்ஸ்மேனான மொஹம்மத் ரிஸ்வான் அதிரடியாக விளையாடி 71 ரன்களில் அவுட் ஆனார். பிறகு இறங்கிய மொஹம்மத் நவாஸ் 20பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். இறுதியாக 19.5வது ஒவேரில் இலக்கை எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

கடைசி வரை போராடி இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதிரடியாக விளையாடிய மொஹம்மத் நவாஸ் ஆட்ட நாயகன் விருத்தைப் பெற்றார்.