ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி! – சூப்பர் 4 முதல் ஆட்டத்தில் இலங்கை அபார வெற்றி!

ஆசிய கோப்பை 2020ல் சூப்பர் 4 சுற்று இன்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைப்பெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக ரன்களை குவித்தது.

rahmanullah-gurbaz-ibrahim-zadran
Rahmanullah Gurbaz Ibrahim Zadran (Photo Credits : Cricbuzz)

தொடக்க பேட்ஸ்மேனான குர்பஸ் சிஸ்ச்சர்ஸ் மற்றும் பௌண்டரிகளாக விளாசினார் 45 பந்துகளை சந்தித்த இவர் 84 ரன்களை குவித்து அவுட் ஆனார். தனது சக பேட்மேனான இப்ராஹிம் சர்ட்ரான் 40 ரன்கள் அடித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்து.

rahmanullah-gurbaz
Rahmanullah Gurbaz (Photo Credits : Cricbuzz)

பிறகு களம் இறங்கிய இலங்கை அணி அருமையாக தொடங்கியது. முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தாலும் ரன்கள் ஏறிக் கொண்டே இருந்தது. இதனால் 19.1 ஒவேரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

pathum-nissanka-kusal-mendis
Pathum Nissanka Kusal Mendis (Photo Credits : Cricbuzz)

லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியைச் சந்தித்த இலங்கை அணி சூப்பர் 4 சுற்றில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்து உள்ளது.

Spread the Info

Leave a Comment