ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா அணி சூப்பர் 4 சுற்றில் தனது மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோஹ்லியும், கே .எல்.ராகுலும் களம் இறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து அரை சத்தம் அடித்தனர்.

பின்பு அதிரடியாக அடித்து ரன் குவிக்க ஆரம்பித்தார் விராட் கோஹ்லி. பின்பு ரசிகர்கள் மிக நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 71வது சதம் அடித்து பூர்த்தி செய்தார். இது T20 சர்வதேச போட்டிகளால் இவர் அடிக்கும் முதல் சதமாகும். இதனால் இந்திய அணி 212 ரன்கள் குவித்தது.

பின்பு 213 ரன்களை இலக்காக நோக்கி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தனது விக்கெட்களை அடுத்தடுத்து பறிகொடுத்தது. இந்தியாவின் ஸ்விங் பௌளரான புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. 4 ஓவர்களில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 5விக்கெட்களை சாய்த்தார் புவனேஷ்வர் குமார்.

அந்த அணியில் இப்ராஹிம் சார்ட்ரான் மட்டும் நிலைத்து நின்று 64 ரன்கள் குவித்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் இந்தியா அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விலகி விளையாடி விராட் கோஹ்லி ஆட நாயகன் விருத்தைப் பெற்றார். இந்திய அணி ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் தோற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.