அதர்வா முரளி நடித்து வெளிவர இருக்கும் படம் ‘குருதி ஆட்டம்’. அதர்வா முரளி, பிரியா பவானி ஷங்கர், ராதிகா, ராதாரவி ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். தமிழ் திரையுலகில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கி உள்ளார். ஆகஸ்ட் 5ஆம் தேதி இப்படம் வெளிவர இருக்கும் நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

படத்தின் டைட்டிலை போலவே குருதி தெறிக்க நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ள அதர்வாவின் டயலாக்குகள் அனல் பறக்கின்றன. வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் அதர்வா. என்னதான் அவரது படங்கள் வரவேற்பு பெற்றாலும் வசூல் ரீதியில் கேள்விக் குறியாகவே உள்ளது. தமிழ் திரை உலகில் ‘பாணா காத்தாடி’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.

கணிதன், இமைக்க நொடிகள், ஈட்டி போன்ற சில திரைப்படங்கலில் இவரைப் பற்றி பேசப்பட்டது. மறைந்த முன்னாள் நடிகர் முரளியின் மகனான இவர் திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க இன்னும் போராடிக் கொண்டு இருக்கிறார். மேலும் 8 தோட்டாக்கள் படத்தை எடுத்த ஸ்ரீ கணேஷ் இப்படத்தை எடுக்க உள்ளதால் இது ஒரு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.