automatic கார் தயாரிப்பு நிறுவனமான Zoox நிறுவனத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் நிறுவனம் வாங்கியது. இந்நிறுவனம் ஓட்டுநர் இல்லாத வாகனத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்டியரிங் வீல், பெடல் வழக்கமான ஓட்டுநர் கட்டுப்பாடுகள் இல்லாத, நான்கு பேர் பயணிக்கும் வகையில் இந்த வாகனம் அமைந்து உள்ளது. மின் மோட்டார்கள் மற்றும் பேட்டரிகள் முன்புறம் மற்றும் பின்புறம் இருப்பதால், வாகனம் எந்த திசையிலும் எளிதாக நகர முடியும். விபத்து சோதனை மற்றும் சான்றிதழையும் இவ்வாகனம் பெற்றுள்ளது அதாவது automaticகாக இயங்கும் இவ்வாகனம் விபத்து இல்லாமல் பயணம் செய்யும் வகையில் பல அதிநவீன சென்சார்கள் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஒருவேளை விபத்து ஏற்பட்டால் அனைத்து பயணிகளையும் சுற்றி வளைக்க ரோபோடாக்ஸியின் மேற்கூரையில் இருந்து u-வடிவ குதிரைக்கால் ஏர்பேக் பாதுகாக்கும். பொதுச் சாலைகளில் செல்வதற்கு சான்றளிக்கப்பட்ட இந்த ரோபோ டாக்சி வாகனமானது நெடுஞ்சாலையில் 75 மைல் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது, 132 கிலோவாட் மணி நேரம் பேட்டரி அமைப்பால் இயக்கப்படுகிறது. அதாவது இதை ஒரு முறை ரிசார்ஜ் செய்தல் 16 மணி நேரம் இயங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த வாகனத்தின் அளவு சிறிய அளவிலான சுரங்கப் பாதை பணியில் பயன்படுத்தப்படும் காரைப் போன்ற உள்ளது. மிக உயர்ந்த தொழிநுட்பம், விபத்தில்லா பயணம் மற்றும் அதிநவீன சென்சார்கள் கொண்டு இவ்வாகனம் உருவாக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த வாகனம் ஆனது ஆட்டோ மொபைல் உலகில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.