ஆமா ஏன்னே ஏன்!😥 திடீர் ஓய்வை அறிவித்த ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்தின் நட்சத்திர ஆட்டக்காரர் மற்றும் சிறந்த ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார். நாளை நடைப்பெற இருக்கும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கூறியுள்ளார். இதைக் குறித்து விரிவாக ட்விட்டரில் அவர் கூறியதாவது. நான் டர்ஹாமில் எனது கடைசி ஒருநாள் போட்டியை செவ்வாய்க்கிழமை அன்று இங்கிலாந்திற்காக விளையாட உள்ளேன். இது நம்ப முடியாத கடின முடிவு ஆகும். என் சக அணி வீரர்களுடன் இங்கிலாந்திற்காக விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தையும் விரும்பினேன். நாங்கள் நம்ப முடியாத பயணத்தை பயணித்தோம். இந்த முடிவை எடுப்பது மிக கடினமாக இருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் என் அணி வீரர்களுக்கு 100 சதவீதத்தை என்னால் வழங்க முடியாது. இங்கிலாந்தில் விளையாடும் எந்த ஒரு வீரருக்கும் குறைவான தகுதி இல்லை என்பதை குறிப்பிடுகிறேன். கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மெட்களிலும் என்னால் இப்போது நீடிக்க முடியாது.

ben-stokes
ben-stokes

பெரிய ஆட்டங்களை என்னிடம் இருந்து அணி எதிர் பார்க்கும் நிலையில், என் உடல் ஒத்துழைக்காது என உணர்கிறேன். ஆனால் ஜோஸ் பட்லர் மற்றும் சக அணி வீரர்களின் இடத்தை நான் எடுத்துக் கொள்கிறேன். மற்றொரு கிரிக்கெட் வீரர் முன்னேறி, கடந்த 11 வருடங்களாக என்னைப் போல் நம்ப முடியாத நினைவுகளை உருவாக்க வேண்டிய நேரம் இது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்னிடம் உள்ள அனைத்தும் கொடுப்பேன். இந்த ஓய்வின் மூலம் டி20யில் என் முழு அர்ப்பணிப்பையும் கொடுப்பேன். ஜோஸ் பட்லர், மேத்யு மோட் மற்றும் வெற்றிப் பெற துணை நிற்கும் அனைத்து வீரர்களும் வெற்றிப் பெற என் வாழ்த்துக்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நாங்கள் முன்னேறி உள்ளோம். மேலும் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. இது வரை நான் விளையாடி உள்ள 104 ஒருநாள் போட்டிகளையும் நேசித்தேன். இன்னும் ஒரு போட்டி மற்றும் உள்ளது, டர்ஹாமில் விளையாடும் எனது கடைசிப் போட்டி என் சொந்த மண்ணில் விளையாடுவது போல் உள்ளது.

stokes-tweet

எப்போதும் போல, இங்கிலாந்து ரசிகர்கள் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள், தொடர்ந்து ஆதரவாக இருப்பார்கள், நீங்கள் தலைச்சிறந்த ரசிகர்கள். செவ்வாய்க் கிழமை நடைப்பெறும் போட்டியில் நாங்கள் வெற்றிப் பெற்று சிறப்பாக முடியும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார். 104 போட்டிகள் விளையாடி உள்ள பென் ஸ்டோக்ஸ் இதுவரை 2919 ரன்கள் குவித்து உள்ளார். இதில் 3 சதங்கள், 21 அரைச்சதங்கள் மற்றும் 74 விக்கெட்டுகளும் அடங்கும். 2019ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 84 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார் என்பது குறிப்படத்தக்கது.

ben-stokes-2019
ben-stokes-2019
Spread the Info

Leave a Comment