தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களில் முக்கியமான ஒருவர் இயக்குனர் பாரதி ராஜா. தமிழ் சினிமா துறைக்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவு செய்த இயக்குனர் பாரதி ராஜாவுக்கு பத்திரிகையாளர்கள் சார்பாக பாராட்டு விழா அளிக்கப்பட்டது. இதில் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிறர் கலந்து கொண்டனர். வழக்கம் போல என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்துக்குரிய பாரதி ராஜா என ஆரம்பித்தார். நண்பர்களாக பத்திரிகையாளர்களை சந்திப்பதில் மிகுந்த மகிச்சியாக உள்ளது. பத்திரிகையாளர்கள் விமர்சிக்கலாம் ஆனால் காயப்படுத்தக்கூடாது. அந்த தர்மத்தை இக்காலத்து பத்திரிகையாளர்கள் கடைபிடிக்கிறீர்கள் வாழ்த்துக்கள் என ஆரம்பித்தார்.

முன்னாள் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் ஆனால் இப்பொது உடலும் ஒத்துழைக்க மாட்டிங்குது, மனசும் ஒத்துழைக்க மாட்டிங்குது. பத்திரிகையாளர்களுக்கு இது 5வது தலைமுறை அதில் லோகேஷ் நான்காவது தலைமுறை. நாலே படத்துல நாலு திசையும் திரும்ப வச்சுட்டானே. சின்ன பயன் சாதனையில் மிக பெரியவர். கமல் சினிமாவில் ஒரு அற்புதமான கலைஞன், கமலுக்கு சினிமா ஒரு பேஸ்ஷன். நான் பரமகுடின்னு சொல்லுவேன் அவன் என்ன தேனிக்காரர்னு சொல்லுவான். ரஜினிக்கும், கமலுக்கும் ஒரே மேடையில் விழா நடத்த வேண்டும் என எனக்கு ஆசை என பேசினார்.

அதற்கு பின் செய்தியாளரை சந்தித்த லோகேஷ் கனகராஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பாரதி ராஜா போன்ற ஜாம்பவான் இயக்குனரோடு மேடையை பகிர்ந்து கொண்டது ரொம்ப பெரிய விஷயம். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் உங்களுடைய அடுத்த படத்திற்கான அப்டேட் என்ன என கேட்டதற்கு கதை எழுத ஆரம்பித்துவிட்டேன் கூடிய விரைவில் வெளி வரும் என கூறினார். மேலும் ரஜினிகாந்த் மற்றும் அஜித் சார்ரோட இணைந்து படம் பண்ண வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை, மேலும் அதை காலம் தன கூற வேண்டும் என கூறினார்.
