பாரதி ராஜா அறிவித்த அறிக்கை! – வருத்தத்தில் ரசிகர்கள்!😢

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் இயக்குனர்களுக்கு ஒரு பட்டியல் போட்டால் அதில் கண்டிப்பாக பாரதி ராஜா இருப்பார். ’16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனார். ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைத்து நடித்த இப்படமானது மாபெரும் வெற்றி அடைந்தது. அதன் பிறகு ‘கிழக்கே போகும் ரயில்’ , ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’ என அடுத்தடுத்து படங்கள் வெற்றி அடைந்தது.

bharathi-raja-shivaj-ganesan

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டார் என கூறலாம். அதன் பிறகு படம் இயக்குவதை குறைத்துக் கொண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ‘பாண்டிய நாடு’ , ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘ஈஸ்வரன்’ என நடிப்பிலும் ஒரு கலக்கு கலக்கி இருந்தார். இவர் கடைசியாக நடித்து வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

bharathi-raja

தற்போது இயக்குனர் பாரதி ராஜா உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் உடலில் முன்னேற்றம் ஏற்படவில்லை என வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனால் திரையுலக பிரபலங்கள் அனைவரும் சீக்கிரம் குணமடைய வேண்டும் என நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

bharathi-raja-report

அதில் அவர் கூறியதாவது ரசிகர்கள் மற்றும் பிறர் யாரும் தன்னை காண வர வேண்டாம் என அதில் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர்.

Spread the Info

Leave a Comment