பரந்தூர் விமான நிலையம் தொடர்பான விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் திமுக அரசை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
இதைக்குறித்து அவர் கூறுகையில் தன் வினையே தன்னைச்சுடும் என்று ஆளும் திமுக அரசு உணர்ந்து உள்ளது.
8 வழிச்சாலை திட்டம் பயணத்தை குறைக்கும் நோக்ககத்தில் கொண்டு வரப்பட்டது அல்ல. முக்கியமான 5 தொழில் நகரங்களை இணைக்கும் திட்டமாகும். அன்றைய எதிர்கட்சியான திமுகவானது கம்யூனிஸ்ட் கட்சி சொன்ன பொய்களை நம்பி எதிர்த்து வந்தது.

இது தவறு என்று உணர்ந்து இருக்கும். மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு பரந்தூர் மக்களின் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றும்? மேலும் பரந்தூர் மக்களுக்கு மாற்று குடியிருப்பு மற்றும் இழப்பீடு தொகையை அரசு வழங்கிட வேண்டும்.
திருவாரூரில் ONGC-இன் எண்ணெய்க் கிணறு அமைக்கும் திட்டத்திற்கும் அரசு அனுமதி தர வேண்டு என்று அவர் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.