சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் கிரியா யோகா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு அதன்பின்னர் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார். பிறகு தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், “யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வருமென்று எதிர்பார்க்கவில்லை. நான் எத்தனையோ படங்கள் நடித்து இருந்தாலும், எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த திரைப்படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபா படங்கள்தான். இந்த படங்கள் வந்த பிறகு தான் அனைவருக்கும் இவர்கள் இருவரையும் தெரிய வந்தது. என் ரசிகர்கள் இரண்டு பேர் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் நான் நடிகராகவே இன்னும் இருக்கிறேன். இமயமலையில் உள்ள குகைகள் சொர்கத்தைப் போல காட்சி அளிக்கும் மேலும் சில மூலிகைகள் கிடைக்கும். அதனை சாப்பிட்டதால் ஒரு வாரத்திற்கு தேவையான ஆற்றல்கள் அதிகமாக கிடைக்கும்.

சிறுவயதில் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காப்பதை விட, வயதானத்திற்குப் பின் உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்க்க வேண்டும். மேலும் அறிவை நல்ல வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பேர், புகழ், பணம் அனைத்தையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் நான் எல்லா உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் சித்தர்களிடம் இருக்கும் நிம்மதி, மகிழ்ச்சி 10% கூட இதுவரை எனக்கு கிடைத்தது இல்லை” என கூறினார். இதைச் சீண்டும் வகையில் இன்று திரைப்பட விமர்சனையாளர் ப்ளூ சட்டை மாறன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “உங்க படத்துல வர்ற மாதிரி எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு எழுதி வச்சிட்டு இமயமலையில் நிம்மதியை தேடலாமே ஜி” என கூறியுள்ளார். இதற்கு ரஜினி ரசிகர்கள் பலர் கடுமையான எதிப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே பல்வேறு நடிகர்களை வம்பிழுக்கும் மாறன் இப்பொது ரஜினியை சீண்டியுள்ளார். இதற்கு முன் அவருக்கும் நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாறி மாறி தாக்கி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
