நடிகர் அருண் விஜய் நடித்து தற்போது வெளியாகியுள்ள வெப் சீரியஸ் தான் ‘தமிழ் ராக்கர்ஸ்’. அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் இந்த வெப் சீரியஸ்ஸில் நடித்து உள்ளனர். இப்படத்தை அறிவழகன் வெங்கடாச்சலம் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ‘ஈரம்’ மற்றும் அருண் விஜயை வைத்து ‘குற்றம் 23’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப் சீரியஸ் நேற்று ஓ.டி.டியில் வெளியானது. இதன் பெயரைப் போலவே கதையும் அமைந்து உள்ளது. அதாவது இப்படத்தின் கதையானது ஒரு இணையத்தளம் சட்டத்தை மீறி படங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்யப்படுகிறது? எப்படி செய்கிறது? என்பதே படத்தின் மையக்கத்தை.

அதை அருண் விஜய் எப்படி கண்டு பிடிக்கிறார்? அதனால் சந்திக்கும் பிரச்சனை என்ன என்பதே படத்தின் மீதி கதை. இந்த வெப் சீரியஸ்ஸை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். இதை குறித்து அவர் கூறுகையில் “படத்த இவங்கள கற்பனை பண்ணி தமிழ் ராக்கர்ஸ்னா இப்படி தான் இருப்பாங்க 4 கம்ப்யூட்டர் வச்சுக்கிட்டு காட்டுல இருக்குற மாதிரி எடுத்து வச்சுருக்காங்க.

தமிழ் ராக்கர்ஸ் நடுத்துறது அவ்ளோ ஈஸியா, இது தெரியாம போச்சேப்பா இது தெரிஞ்ச நாமளும் 10 டொமைன் வாங்கி நடத்திற்கலாமே. இதுல சோகம் என்னன்னா தமிழ் ராக்கர்ஸ் ஒழிக்க படம் எடுத்துருக்காங்க அந்த தமிழ் ராக்கர்ஸ் படமே தமிழ் ராக்கர்ஸ் வந்துச்சாம்” என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.