நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரன், சூரி, பிரகாஷ் ராஜ், ஆர்.கே. சுரேஷ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் ‘விருமன்’. முத்தையா இயக்கத்தில் உருவாகிய இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இயக்குனர் இதற்கு முன்னனரே நடிகர் கார்த்தியை வைத்து கிராம கதைக்களத்தை வைத்து ‘கொம்பன்’ என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படமும் அதே போல் படமும் கிராமத்து கதையை மையமாக கொண்டு உருவாகி வெளிவந்துள்ளது. இப்படத்தை தனது அண்ணனின் நிறுவனமான 2D என்டர்டைமென்ட் தயாரித்து வெளி வந்துள்ளது. நேற்று வெளியான இப்படத்தின் முதல் காட்சி விமர்சனம் படம் நன்றாக இருக்கிறது, பருத்தி வீரன் படத்தை போன்று உள்ளது என்று கூறினார்கள்.

அதற்கு பிறகு கலவையான விமர்சனங்களே பெற்று வருகிறது. இயக்குனர் முத்தையா எடுத்த படத்தையே எடுத்து வைத்துள்ளார் என்றெல்லாம் விமர்சனம் வந்துள்ளது. அந்த வகையில் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன் இப்படத்தை கழுவி ஊற்றியுள்ளார். அவர் கூறியதாவது “கொஞ்ச நாளைக்கி முன்னாடி லோகி யூனிவெர்ஸ்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க, இப்போ முத்தையா யூனிவெர்ஸ்னு தான் சொல்லணும்.

ஹீரோவா கோவத்தால அடிக்க முடியாது, பாசத்தால் தான் அடிக்க முடியம். பாசத்தில எது கேட்டாலும் ஹீரோ கொடுத்துருவாரு கொடலு, குந்தாணி, கிட்னி, லீவேர்னு எது கேட்டாலும் கொடுத்துருவாங்க. படத்தில ஹீரோயின் குறும்புத்தனம் பன்றேன்னு, கிறுக்குத்தனம் பண்ணிட்டு இருக்கு.

இந்த ஹா படமும் வேஸ்ட், படத்தை ரெவியூஸ் பண்றதும் வேஸ்ட்” என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.