சுகர் படம்னு சொல்லி நம்மள BP வர வச்சுட்டாங்க – ‘தி லெஜெண்ட்’ ப்ளூ சட்டை ரிவ்யூ!😀

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான அண்ணாச்சி சரவணா அருள் நடிக்கும் திரைப்படமான ‘தி லெஜெண்ட்’ திரைப்படம் நேற்று வெளியானது. திரையுலகில் முதல் முறையாக நடிக்க இருக்கும் இவர் படத்தின் ப்ரோமோஷன் மிக பிரபண்டமாக இருந்தது எனவும் கூறலாம். ப்ரஸ் மீட், Adஸ் என பணத்தை அள்ளி இறக்கிருந்தார் அண்ணாச்சி. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படமானது வெளியானது. இயக்குனர் ஜே-டி ஜெர்ரி இப்படத்தை இயக்கி இருந்தார். படத்தில் பிரபலங்களுக்கும் குறை இல்லை. பிரபு, யோகி பாபு, நாசர்,விஜயகுமார் மற்றும் மறைந்த நடிகர் விவேக் என பிரபல நடிகர்கள் நடித்து இருந்தனர்.

the-legend
The Legend

வெளிநாட்டில் தங்கி அங்கேயே படித்து விஞ்ஞானியாக இருக்கும் சரவணன் தனது சொந்த கிராமத்திக்கு வருகிறார். அங்கு தனது நண்பனின் குடும்பம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு நண்பர் இறந்து விடுகிறார் அதனால் மனமுடைந்த அவர் சர்க்கரை வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். பிறகு சந்திக்கும் பிரச்சனைகள் மருந்து கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதையாக அமைந்து உள்ளது. ஒரு தரப்பினர் நன்றாக உள்ளது என கூறினாலும் இன்னோரு தரப்பினர் என்னவோ குறையே கூறுகின்றனர்.

saravanan-arul
Saravanan Arul

திரைப்படங்களை விமர்சனம் செய்து மிக பிரபலம் ஆனவர் ப்ளூ சட்டை மாறன். அனைவரையும் வம்பிழுக்கும் அவர் இப்படத்தையும் கழுவி ஊற்றியுள்ளார். சரவணனுக்கு நடிப்பே வரல, ரோபோ போல் படம் முழுக்கவும் இருக்கிறார். மேலும் திரைக்கதையும் சரியாக அமையவில்லை, ரியாக்ஷனும் வரவில்லை. படம் முழுக்க அவர் மட்டும் தான் வருகிறார். 50 வயதிற்கு மேற்பட்ட இரண்டு சுகர் பேஷண்ட் சந்திக்கும் பொது இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும் என பங்கமாய் கலாய்த்து உள்ளார். மேலும் “சுகர் படம் எடுக்குறேனு சொல்லி நம்மள BP வர வச்சதுதான் மிச்சம்” என கழுவி ஊற்றியுள்ளார்.

blue-sattai-maran
Blue Sattai Maran
Spread the Info

Leave a Comment