வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழாவில் ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த சிம்பு!😎

vtk-simbu

நடிகர் சிம்பு நடித்து வெளிவர இருக்கும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். சிம்பு, சித்தி இத்நானி, ராதிகா சரத் குமார் ஆகியோர் இப்படத்தில் நடித்து உள்ளனர். இப்படத்தை ஐசரி கணேஷன் தயாரித்து உள்ளார். கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஏற்கனவே சிம்புவை வைத்து ‘விண்ணை தண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களை எடுத்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக இக்கூட்டணி … Read more

‘ஜெயிலர்’ படத்தில் இணையவுள்ள விஜயோடு நடித்த பிரபல நடிகர்!😃

jailer-rajini

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வந்து கொண்டு இருக்கிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கம் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் அவர்கள் கடைசியாக நடித்த படமான ‘அண்ணாத்தே’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை மக்களிடம் பெறவில்லை. அதே போல நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ திரைப்படமும் கலவையான விமர்சங்களையே பெற்றது. இதனால் ‘ஜெயிலர்’ படமானது இருவருக்கும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. இப்படத்தின் புதிய போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் … Read more

எப்போதும் தமிழ்நாடு! – ‘இசைஞானி-இசைப்புயல்’ வைரல் வீடியோ!😍

ilayaraaja-ar-rahman

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர்களில் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் முக்கியமான புள்ளிகள் ஆவார்கள். 90களுக்கு முன்னர் இளையராஜா தமிழ் சினிமாவை கட்டி ஆண்டு கொண்டு இருந்தார். ‘அன்னக்கிளி’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இளையராஜா அறிமுகம் ஆனார். இதுவரை ஆயிரம் படத்திற்கு மேல் இசையமைத்து உள்ளார். அதே போல 90களுக்கு பிறகு ‘ரோஜா’ படத்தின் மூலமாக ஏ.ஆர்.ரகுமானை அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் மணிரத்னம். இளையராஜா எப்படி 90களுக்கு முன்னனர் இருந்தாரோ அதேபோல ஏ.ஆர்.ரஹ்மான் 90களுக்கு பிறகு … Read more

நடிகர் விஜய் உடன் ஒரே விமானத்தில் பயணம் செய்த பிரபல நடிகை!😃 – புகைப்படம் வைரல்!

varisu

நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் கமிட்டாகி நடித்துக் கொண்டு உள்ளார். வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்திற்கு தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சரத்குமார், பிரபு ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தடுத்து நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது ஹைதராபாத்தில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. படத்தின் ஷூட்டிங்கிற்காக விஜய் அவர்கள் விமானத்தில் பயணித்து உள்ளார். அதே விமானத்தில் … Read more

யுவன் ஷங்கர் ராஜா பிறந்த நாள்!😎 – இளையராஜா பகிர்ந்த சுவாரசியமான பதிவு!

ilayaraja

தமிழ் சினிமா துறையில் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் யுவன் ஷங்கர் ராஜா. அவருடைய 43வது பிறந்த நாளான இன்று ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது தந்தையான இளையராஜா வாழ்த்து தெரிவித்து ஒரு சுவாரசியமான தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது, “ஒரு காலக்கட்டத்தில் ஆழியாறு டேம் சென்று கம்போஸ் செய்வது பழக்கமாக இருந்தது. அந்த காலத்தில் பல படங்களுக்கு ஆழியாறு டேம் கெஸ்ட் … Read more

புதுவிதமாக உருவாகி இருக்கும் பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் எப்படி உள்ளது?

dushara-kalidas

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகி உள்ளது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷார விஜயன், கலையரசன் மற்றும் ஷபீர் கல்லாரக்கல் ஆகியோர் நடித்து உள்ளனர். விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் மனோஜ் லியோனல் ஜேசன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தென்மா இசையமைத்து உள்ளார். பா.ரஞ்சித்தின் படம் என்றாலே கதை ஒரு தனி விதமாக இருக்கும். வழக்கம் போல இப்படமும் வித்யாசமான கதையில் அமைந்து உள்ளது. கலையரசன் சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் … Read more

ஒரு காட்டுல பெரிய சிங்கம்🦁 ஒன்னு இருந்துச்சான்! – மிரட்டும் அருண் விஜயின் ‘சினம்’ ட்ரைலர்!🔥

arun-vijay

நடிகர் அருண் விஜய் நடித்து கூடிய விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘சினம்’. இப்படத்தில் அருண் விஜய், பல்லாக் லால்வானி, காளி வெங்கட் ஆகியோர் நடித்து உள்ளனர். குமாரவேலன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷபீர் தபேர் ஆலம் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. அருண் விஜய் தற்போது வித்யாசமான படங்களில் நடிப்பதை தனது ஸ்டைலாக வைத்துள்ளார். என்னதான் இவர் தமிழ் சினிமா துறைக்கு வந்து பல வருடங்கள் ஆனாலும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க … Read more

விக்ரமின் பல கெட்டப்கள் ஒர்கவுட் ஆனதா?😎- கோப்ரா பட விமர்சனம்!

chiyaan-vikram

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ‘கோப்ரா’ திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலி ரவி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்து உள்ளனர். மேலும் இப்படத்தின் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராணா இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா … Read more

சூப்பர்ஸ்டாருக்கு பேரனாக நடிக்கும் லேடி சூப்பர்ஸ்டார் கூட நடித்த குட்டி பயன்!😍

jailer-rajini

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இப்படத்தின் புது போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியதாக தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளார். மேலும் இப்படத்தை அண்ணாத்தே படத்தை தயாரித்த சன் பிச்சர்ஸ் தயாரிக்க உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், … Read more

தெறிக்க விடலாமா?😎 – ஐ யம் வெய்டிங்!🔥 – 8 ஆண்டுகளுக்கு பின் மோத இருக்கும் விஜய்-அஜித்!

ajith-vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களிள் முக்கியம் ஆனவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். இருவருக்குமே கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்களது ஒரு சாதாரண புகைப்படம் மற்றும் வீடியோ வந்தாலே சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும். அப்படி இருக்கும் போது படம் என்றால் சொல்லவா வேணும். விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியானாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அதே சமயம் சமூக வலைத்தளங்களில் அதிக சண்டை மற்றும் மோதல்களும் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக இருவர்களின் படங்கள் வெளியானால் ரசிகர்கள் ஒருவரையொருவர் மீம்ஸ்களில் … Read more