அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது. கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அப்போது கடும் மோதல் இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். மேலும் வாகனங்கள் பல சேதம் அடைந்தது. இதனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அலுவலகத்திற்கு சீல்வைத்தனர். பிறகு நீதிமன்ற உத்தரவு படி அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சி.வி.சண்முகம் அலுவலத்தை ஆய்வு செய்ததில் அலுவலகத்தில் பல பொருட்கள் காணவில்லை, மேலும் அதிமுகவின் முக்கிய கோப்புகள் காணவில்லை என புகார் அளித்து இருந்தார். இது தொடர்பான 4 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்து.

மேலும் இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் மற்றும் அதிமுக அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்த போலீசார் தரப்பில் முடிவு எடுத்துள்ளனர். இதனால் அதிமுக கட்சியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.