நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி.வாசு இயக்க உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று மைசூரில் நடைபெற்றது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு, இயக்குனர் பி.வாசு, நடிகை ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. பாகுபலி மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

மேலும் வைகைப்புயல் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் ரசிகர்களுக்கு இடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சந்திரமுகி படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி பிரமாண்ட வெற்றிப்பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்க உள்ளது.
